• Tue. Dec 3rd, 2024

இலங்கையில் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு

Apr 2, 2022

இலங்கையில் இன்று(02) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ளனர்.

இதன்காரணமாக நாளைய தினம் நாட்டின் சகல பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.