நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லீட்டர் டீசல் 139 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.