• Fri. Jun 2nd, 2023

இலங்கையில் மாயமான முக்கிய கோப்புகள்! தீவிர விசாரணையில் புலனாய்வுப் பிரிவினர்

Aug 25, 2021

இலங்கையில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுத்தளத்திலிருந்து சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு மாயமான கோப்புக்களில் , உள்நாட்டு மருந்து விநியோக முகவர்களின் விபரம், மருந்து வகைகளின் பதிவுகள் என்பன தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புளும் உள்ளடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.