• Fri. May 9th, 2025

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் மீளத் திறக்கும் பாடசாலைகள்!

Jul 12, 2021

இலங்கையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை(12) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கல்வி அமைச்சரிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.