இலங்கையில் நாளை சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நாளைய மின்துண்டிப்பு மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் நாளை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை 6 மணித்தியாலங்களும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை 4 மணித்தியாலங்களும், இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 2 மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.