ஒட்சிசன் சார்ந்த மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் கொரோனா ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.
ஒட்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை 12 சதவீதமும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் கொரோனா நோயாளர்களின் இறப்பு எண்ணிக்கையும் சுமார் 17 சதவீதம் உயர்ந்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒரு நாளைக்கு சுமார் 30 இறப்புகள் பதிவாகி வருவதாகவும், 60 முதல் 65 சதவீத மரணங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்களால் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது