• Sun. May 28th, 2023

இலங்கை இருளில் மூழ்குமா?

Feb 17, 2022

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக குறித்த நிலையத்தில் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.