• Sat. Jun 3rd, 2023

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்!

Mar 22, 2022

உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதலால், உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

அண்டை நாடுகளிலும் அகதிகளாக மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் ஐநாவுக்கான முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடான போலந்து நாட்டில் 21 லட்சம் உக்ரைன் நாட்டவர்கள் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.