உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
இம்முறை சர்வதேச விதவைகள் தினத்தினை முன்னிட்டு; இங்கிலாந்தின் சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு, சமூக மேம்பாட்டு மையம் (International United Women Federation in collaboration with centre for community development) நடத்தும் ”சர்வதேச விதவைகள் தின மாநாடு” 20/06/2021 அன்று ஜூம்(Zoom) செயலி ஊடாக நடைபெறவுள்ளது.