பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை அளவு குறைந்த சுகர் ப்ரீ மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள டேண்டா அலாயார் என்ற நகரில் இயங்கி வரும் பன்வார் பார்ம் என்ற பண்ணையில், சொனேரோ , ஜெலின், நிட் என்ற 3 வகைகளில் சுகர் ப்ரீ மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.150 என கூறப்படும் நிலையில், மக்களிடையே இது வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட வகைப் பழங்கள் மற்றும் உணவுகளை மட்டும்தான் உட்கொள்ள முடியும் என்ற நிலை இருக்கும் போது, தற்பொழுது சுகர் ப்ரீ மாம்பழம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.