• Wed. Jan 22nd, 2025

புடினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி புட்டினின் திட்டத்தை அம்பலப்படுத்திய தளபதி

Mar 24, 2022
Vladimir Putin, Russia’s president, pauses during his annual news conference in Moscow, Russia, on Thursday, Dec. 20, 2018. Putin said Russia is expected to exceed 4% CPI target in 2018. Photographer: Andrey Rudakov/Bloomberg

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரை கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை உக்ரைன் தளபதி வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்து 29வது நாளாக படையெடுத்து வருகின்றது. இந்த நிழரயில் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடும், புடினின் நட்பு நாடான பெலராஸ் மற்றும் கிரிமியாவுக்கு கூடுதல் ராணுவ உபகரணங்களை ரஷ்ய அனுப்பியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கீவ் சுற்றி வளைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் Donetsk, Luhansk பகுதிகளை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவுக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என பெலராஸுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒருவேளை உக்ரைன் மீதான படையெடுப்பில் பெலராஸ் இணைந்தால், ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் அந்நாட்டிற்கு ஏற்படும் என மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.