• Tue. Dec 24th, 2024

உக்ரைனில் போரிடச் சென்ற உலகின் திறமையான வீரர்

Mar 12, 2022

உலகின் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த வாலி, உக்ரைன் படையினருடன் சேர்ந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கனடா ராணுவத்தில் பணியாற்றிய வாலி, செலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று முன்னாள் ராணுத்தினர் மூவருடன் சேர்ந்து மார்ச் நான்காம் நாள் உக்ரைனைச் சென்றடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நாற்பது வயதான வாலிக்குத் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. கனடா ராணுவத்தின் சார்பில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றிய அவர் கணினி அறிவியலாளரும் ஆவார்.

அவர் ஈராக்கில் பணியாற்றியபோது டேக் 50 வகைத் துப்பாக்கியால் மூன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஐஎஸ் தீவிரவாதியைக் குறிபார்த்துச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

வாலி என்பது அவரின் இயற்பெயர் இல்லையென்றும், ஆப்கானியர்கள் அவருக்குச் சூட்டிய பெயர் என்றும் கூறப்படுகிறது.

உலகிலேயே மிகவும் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான வாலியால் ஒரு நாளில் 40 பேரைச் சுட்டுக் கொல்ல முடியும் என நம்பப்படுகிறது.

வாலியைப் பல ஊடகங்கள் பேட்டி எடுத்துள்ள போதிலும், அவர் கூறும் அனைத்தும் உண்மையாக இருக்காது எனப் பலரும் கருதுகின்றனர். அவர் ஏற்கெனவே ரஷ்ய வீரர்கள் ஆறுபேரைக் கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.