எங்க ஊர் இளையரஜா திரு கணபதிப்பிள்ளை சுதாகரன் RIP anna …💐💐💐
ஆக்கம்: முல்லை நிஷாந்தன்
1989/1990களில் யாழ்ப்பாணம் என்னும் அழகிய நகரில் நுணாவில் வாசல், சாகவச்சேரி என்னும் ஒரு இசை பூக்கும் ஊரில் “காண்டீபன்“ என்று ஒரு இசைத் தமிழன் உயர்கின்றார். சிறுவயதில் இசையில் அனுபவம் சிறக்க, சிங்கார சென்னைக்கு பயணம் செய்தவர் அண்ணா காண்டீபன்.
பிரபல்யம் ஆகும் முன்பு இசைப்புயல் “எ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மாரீஸ் விஜய் ஆகியோரை தான் இசையமைத்த பாடல்களுக்கு keyboard வாசிக்க வைத்தார். இது இன்று பலருக்கு தெரியாமல் போனது என்பதே கவலையை தந்தது.
1992இல் ரோஜா படத்தில் எ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளர் ஆக அறிமுக படுத்திய பின் அடுத்த வருடமே “காவலுக்கு கண்ணில்லை” என்ற படத்தில் எமது திரு கணபதிப்பிள்ளை சுதாகரன் (புனைபெயர் திரு காண்டீபன்) இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்த பட்டார்.
முதல் படத்தில், பாடகி ஸ்வர்ணலதா, எ ஸ் . பி பாலா அண்ணாவுடன் ஒரு பாடல்! பிரமிட் நிறுவனம்
பெருமையுடன் வெளியிட்டு வைத்தது. இப்படி இவருடைய பயணம் ஆரம்பிக்க, ஒருவருடம் கூட நிலையாக நிக்க முடியாமல் இவர் தனது ஊருக்கே மீண்டும் வருகிறார். இந்திய அரசியல் நெருக்கடியை உணர்ந்து அவர்களே அனுப்பி வைக்கிறார்கள். இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் இவரை நன்கு அறிந்ததும் இவரது உழைப்புக்கு முத்திரை குத்தி செல்கிறது. 27க்கும் அதிகமான சிங்கள பாடல்களுக்கு இசை அமைத்ததும் சிங்கள ஊடகங்கள் இவரை நன்கு அறிந்ததும் மறக்க முடியாத செய்தியாக நிலவுகிறது.