• Sun. Nov 17th, 2024

Srilanka news

  • Home
  • புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் சேவை

புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ் சேவை

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை…

இலங்கையில் நீருக்கும் தட்டுப்பாடு

மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் தற்போது மணல் மூட்டைகளை…

இலங்கை மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று(28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே…

இலங்கை மக்களுக்கு போலிஸாரின் கோரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெறலாம் என கூறியுள்ள பொலிஸார் பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் குற்றவியல்…

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக…

ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் – இலங்கை

ரஷ்யாவில் இலங்கை தேயிலைக்கான கேள்வி உள்ளபோதிலும் அதனை ஏற்றுமதி செய்வதில் இலங்கை நெருக்கடியில் உள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்ற போதிலும் இலங்கை தேயிலைக்கான கேள்வி குறையவில்லை என இலங்கை தேயிலை சபை…

பண்டிகைக் காலத்தில் முடங்குமா இலங்கை?

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தற்போது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது சுகாதார வழிகாட்டுதல்கள் விதிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த…

இலங்கை ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்

இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் விசேட கூட்டம் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(22) பிற்பகல் நடைபெற்றது. நாட்டின் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில்…

இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை ஆரம்பம்

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு – பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே…