நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாயவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.