• Fri. Apr 19th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 10

Aug 10, 2021

ஆகத்து 10 கிரிகோரியன் ஆண்டின் 222 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 223 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 143 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.

654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார்.

955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்.

1519 – மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன.

1680 – நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.

1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார்.

1755 – பிரித்தானிய இராணுவனர் அகாடியர்களை நோவா ஸ்கோசியாவில் இருந்து பதின்மூன்று குடியேற்றங்களுக்கு கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் செய்தி இலண்டனை வந்தடைந்தது.

1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

1793 – இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.

1802 – இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது.[1]

1809 – கித்தோ, (இன்றைய எக்குவடோரின் தலைநகரம்) எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இக்கிளர்ச்சி 1810, ஆகத்து 2-இல் அடக்கப்பட்டது.

1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1846 – சிமித்சோனிய நிறுவனம் அமெரிக்க சட்டமன்றத்தால் அங்கீகாரம் பெற்றது.

1856 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

1904 – உருசிய-சப்பானியப் போர்: உருசியப் படைகளுக்கும் சப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

1905 – உருசிய-சப்பானியப் போர்: இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுகள் அமெரிக்காவில் நியூ ஹாம்சயர், போர்ட்ஸ்மவுத் நகரில் ஆரம்பமாயின.

1913 – இரண்டாம் பால்க்கன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, பல்காரியா, உருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1920 – முதலாம் உலகப் போர்: உதுமானிய சுல்தான் ஆறாம் மெகுமதுவின் பிரதிநிதிகள் உதுமானியப் பேரரசை கூட்டுப் படைகளின் நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1932 – 5.1 கிகி எடையுள்ள விண்வீழ்கல் ஒன்று ஏழு துண்டுகளாக வெடித்து அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் ஆர்ச்சி என்ற நகருக்கருகில் வீழ்ந்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படையினர் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி சப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

1953 – முதலாவது இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியம் வியட் மின்ன்னுக்கு எதிராகப் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தனது படைகளை மத்திய வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.[2]

1966 – கனடா, ஒட்டாவா நகரில் எரோன் வீதிப் பாலம் உடைந்ததில் ஒன்பது தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

1993 – நியூசிலாந்து, தெற்குத் தீவை 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2001 – அங்கோலாவில் தொடருந்து ஒன்று தாக்கப்பட்டதில் 252 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – திருகோணமலையில் சேருவிலை பகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ச்சியாகக் குண்டுகள் வீசியதில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2009 – சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

2014 – தெகுரான் நகரில் மெகுரபாது வானூர்தி நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.