• Tue. Apr 16th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30

Aug 30, 2021

ஆகத்து 30 கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]

1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.

1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.

1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1799 – இரண்டாவது கூட்டமைப்புப் போரில், நெதர்லாந்தின் முழுக் கடற்படைக் கப்பல்களையும் பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.

1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.

1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.

1917 – வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.

1940 – இரண்டாவது வியென்னா உடன்பாட்டின் படி, உருமேனியாவின் வடக்கு திரான்சில்வேனியா பகுதி வின் அங்கேரிக்கு வழங்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.

1945 – வியட்நாமில் ஆகத்துப் புரட்சி முடிவுக்கு வந்தது. நியூவென் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பாபோ டாய் முடிதுறந்தார்.

1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.

1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் மக்கள் முஜாகுதீன் குழுவினர் நடத்திய குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.

1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 – ஈழத்துப் பெண்ணிலைவாதியும் கவிஞருமான செல்வநிதி தியாகராசா யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.

1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2002 – பிரேசிலில் வானூர்தி ஒன்று ரியோ பிராங்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 31 பேரில் 23 பேர் உயிரிழந்தனர்.[2]

2008 – ஈழப்போர்: கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.

2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.