• Sat. May 18th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 31

Aug 31, 2021

ஆகத்து 31 கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.

1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.

1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.

1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.

1782 – திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர்.

1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.

1858 – பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.

1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.

1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.

1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.

1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன.

1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.

1940 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.

1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1949 – அல்பேனியாவில் கிரேக்க சனநாயக இராணுவம் பின்வாங்கியது. கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.

1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.

1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.

1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.

1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.

1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.

1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.

1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.

1997 – வேல்சு இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.

1998 – வட கொரியா தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியது.

1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.

1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் காயமடைந்தனர்.

2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.

2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.

2011 – திக்குவல்லை கலவரம்: முசுலிம்களின் நோன்புப் பெருநாளன்று இலங்கையில் தென்மாகாணத்தில், திக்குவல்லை எனும் இடத்தில் முசுலிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் மூண்டது.

2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.