• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 1

Sep 1, 2021

செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.

1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர்.

1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது.

1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார்.

1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.

1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.

1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.

1804 – சிறுகோள் பட்டையில் உள்ள மிகப்பெரும் சிறுகோள்களில் ஒன்றான யூனோ செருமனிய வானியலாளர் கார்ல் ஹார்டிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1859 – 1859 சூரியப் புயல் இடம்பெற்றது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற ஒன்றியப் படைகளை வர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.

1880 – காந்தாரத்தில் இடம்பெற்ற சமரில் ஆப்கானித்தான் தலைவர் முகம்மது அயூப் கானின் படைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் முடிவுக்கு வந்தது.

1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் உயிரிழந்தனர்.

1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1905 – ஆல்பர்ட்டா, சஸ்காச்சுவான் ஆகியன கனடா கூட்டமைப்பில் இணைந்தன.

1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914 – மார்த்தா என அழைக்கப்பட்ட கடைசிப் பயணிப் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.

1928 – அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது.

1939 – ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.

1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சசு ஒப்பந்தம்) செய்து கொண்டன.

1961 – கூட்டுச்சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிறேட் நகரில் ஆரம்பமானது.

1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது.

1969 – லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் முஅம்மர் அல் கதாஃபி ஆட்சியைப் பிடித்தார்.

1970 – யோர்தான் மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1972 – ஐசுலாந்தில் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், உருசியாவின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.

1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981 – மத்திய ஆபிரிக்கக் குடியர]சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.

1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

2004 – பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்: உருசியாவின் வடக்கு ஒசேத்திய-அலனீயாவில் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. மூன்றாம் நாள் முடிவில் மொத்தம் 385 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.