• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 10

Jul 10, 2021

சூலை 10 கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.

988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது.
1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.

1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார்.

1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார்.

1553 – ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

1584 – ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.

1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் பிரித்தானியா மீது போரை அறிவித்தார்.

1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.

1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.

1869 – சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.

1882 – பெருவுடனான போரில் சிலி பெரும் இழப்பைச் சந்தித்தது.

1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.

1909 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.

1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.

1921 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன.

1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.

1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெகர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறது.

1938 – ஓவார்டு இயூசு 91-மணி நேரத்தில் உலகைச் சுற்றிவரும் விமானப் பயணத்தை ஆரம்பித்தார். இது புதிய உலக சாதனை ஆகும்.

1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாட்சி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.

1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு சிசிலியில் ஆரம்பமானது.Samuel Eliot Morison (2002). Sicily-Salerno-Anzio. University of Illinois press.

1947 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.

1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் கேசாங் நகரில் ஆரம்பமாயின.

1962 – உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

1966 – மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சிகாகோ விடுதலை இயக்கம் 60,000 பேர் கலந்து கொண்ட பெரும் பேரணியை நடத்தியது.

1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1973 – பகாமாசு பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.

1976 – அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.

1978 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.

1985 – கிரீன்பீஸ் கப்பல் ரெயின்போ வாரியர் ஓக்லாந்து துறைமுகத்தில் பிரெஞ்சு முகவர்களினால் குண்டு வைத்துத் மூழ்கடிக்கப்பட்டது.

1985 – சோவியத் உசுபெக்கித்தானில் ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 200 பேரும் உயிரிழந்தனர்.

1991 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முடிவுக்கு வந்ததை அடுத்து தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

1991 – போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.

1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.

1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் “நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு” ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.

2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

2011 – உருசியப் பயணிகள் கப்பல் பல்கேரியா வோல்கா ஆறு தத்தாரித்தானில் வோல்கா ஆற்றில் மூழ்கியதில் 122 பேர் உயிரிழந்தனர்.

2017 – ஈராக்கின் மோசுல் நகரம் இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டது.