• Sat. Nov 2nd, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 20

Sep 20, 2021

செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான்.

1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.

1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது.

1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.

1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.

1854 – கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில் உருசியரைத் தோற்கடித்தன.

1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் தில்லியைக் கைப்பற்றின. சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1878 – தி இந்து முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1893 – அமெரிக்காவில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட பெட்ரோலினால் இயங்கும் தானுந்து சோதிக்கப்பட்டது.

1909 – நன்னம்பிக்கை முனை, நட்டால், ஒரேஞ்சு, திரான்சுவால் ஆகிய பிரித்தானியக் குடியேற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தென்னாபிரிக்க ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது.

1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1941 – லித்துவேனியாவில் 403 யூதர்கள் (128 ஆண்கள், 176 பெண்கள், 99 குழந்தைகள்) கொல்லப்பட்டனர்.

1942 – உக்ரைனில் நாட்சி ஜெர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: கனடாவின் போர்க்கப்பல் ஒன்று ஐசுலாந்தின் தெற்கே தாக்கி அழிக்கப்பட்டதில் 145 பேர் கொல்லப்பட்டனர்.

1945 – மகாத்மா காந்தியும் சவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.

1946 – போரினால் 7 ஆண்டுகள் நடத்தப்படாதிருந்த கான் திரைப்பட விழா இடம்பெற்றது.

1946 – பொது வாக்கெடுப்பு நடைபெற்று ஆறு நாட்களின் பின்னர், டென்மார்க் மன்னர் பத்தாம் கிறித்தியான் பரோயே தீவுகளின் விடுதலைப் பிரடனத்தை ரத்துச் செய்தார்.

1955 – சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.

1977 – வியட்நாம் ஐநாவில் இணைந்தது.

1979 – பிரான்சின் ஆதரவுடன் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து முதலாம் பொக்காசா பேரரசர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – சவுக்கடி படுகொலைகள்: இலங்கை, மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றில் சவுக்கடி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டப்பட்டனர்.

1990 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

2001 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” அறிவித்தார்.

2003 – மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது.

2017 – சூறாவளி மரியா புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.

2018 – தன்சானியா, விக்டோரியா ஏரியில் உக்காரா தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 161 பேர் உயிரிழந்தனர்.