• Sun. Dec 8th, 2024

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 16 பேர் மாயம்

Feb 24, 2022

இந்தியா- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹன்பட் மாவட்டம் நிர்ஷா பகுதியில் இருந்து ஜம்தாரா மாவட்டம் நோக்கி டாம்டொடர் ஆற்றில் இன்று படகு சென்றுகொண்டிருந்த படகில் 18 பேர் பயணித்தனர்.

படகு பார்பிண்டியா பாலம் அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும் வீசியது.

இதில், படகு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பயணிகள் அனைவரும் ஆற்றுக்குள் மூழ்கினர்.

சிலர் படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு நதியில் தத்தளித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

அதில், 2 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், படகு விபத்தில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் நதியில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.