தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 23,888- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,036- ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 8,305- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.