• Sat. Nov 16th, 2024

நாட்டு மக்களை பாதுகாக்க போரிஸ் திட்டவட்டம்

Jun 2, 2021

பச்சை பட்டியலில் உள்ள நாடுகளை அம்பர் மற்றும் சிவப்பு பட்டியல்களுக்கு மாற்ற பிரித்தானியா தயங்காது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இந்திய மாறுபாடு பரவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட சில நாடுகள் பிரித்தானியா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, நாட்டு மக்களை பாதுகாக்க பிரித்தானியாவின் பயண பட்டியலில் பச்சை பட்டியலில் உள்ள நாடுகளை அம்பர் மற்றும் தேவைப்பட்டால் சிவப்பு பட்டியல்களுக்கு மாற்ற பிரித்தானியா தயங்காது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பிரித்தானியர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் தேவைப்படும் போது நாடுகளை சிவப்பு பட்டியலில், அம்பர் பட்டியலில் தொடர்ந்து சேர்க்க வேண்டும்.

கட்டாயம் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், பசுமை பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு மற்றும் சிவப்பு பட்டியலுக்கு நாடுகளை மாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை.

தடுப்பூசி தயாரிப்பைத் தொடரவும், இந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு தான் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார்