• Wed. Nov 27th, 2024

பயிற்சி விமானம் பயாகலையில் அவசரமாக தரையிறக்கம்!

Dec 22, 2021

தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் ஒன்று பேருவளைக்கும் பயாகலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அவசரமாக தரையிறங்கும் நேரத்தில், பயிற்றுவிப் பாளரும் முறையான பயிற்சி பெற்ற விமானியும் மட்டுமே விமானத்தில் இருந்ததாகவும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிய வருகிறது.

விமானப்படை இரண்டு விஷேட குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

பயாகலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! - ஜே.வி.பி நியூஸ்