• Tue. Dec 3rd, 2024

இலங்கை

  • Home
  • கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு வெவ்வேறு ஸ்டிக்கர்கள்

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு வெவ்வேறு ஸ்டிக்கர்கள்

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஸ்டிக்கர் அமைப்பு முழு பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கும் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். அதன்படி 11 துறைகளுக்கு…

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க…

பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கும்படி கோரிக்கை

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் 21ம் திகதி வரை நீட்டிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் முக்கிய தரப்பினர் 3 பக்க கடிதங்களை அனுப்பி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகிறது.…

பயணத் தடை தளர்த்தப்படுமா – இராணுவத் தளபதி

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்…

மீண்டும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(06) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளை…

பயணத்தடையிலும் வீதி விபத்தில் 6 பேர் பலி

பயணத்தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று(06) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் நுவரெலியா மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்…

வவுனியாவில் சுகாதார விதிகளை மீறி நடைபெற்ற திருமணம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்ற நிலையில் திருமண மண்டபம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் குறித்த…

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று(05) காலை குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 64 சக்திபீடங்களில் ஒன்றாகப் போற்றிச் சிறப்பிக்கப்படுவது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன். ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் பக்கதர்கள் திருவிழா நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று(05) நண்பகல் இராஐநாக ஒன்று…

சிலாபம் கடற்கரையில் கரையொதுங்கிய உருளை

சிலாபம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாடு கடற்கரையில் 4,000 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள பெரிய உருளையொன்று கரையொதுங்கியுள்ளது. இதனையடுத்து உழவு இயந்திரம் மூலம் கடற்படையினர் அதனை இழுத்து கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உருளை, துறைமுகங்களில் கப்பல்களை தரித்து வைத்திருக்கப் பயன்படுவதாகவும்,…