• Thu. Nov 21st, 2024

Gotabaya Rajapaksha

  • Home
  • எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியின் உத்தரவு!

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியின் உத்தரவு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் நேற்றிரவு(11) நடந்தது. இதன்போது ஜனாதிபதி மேற்படி பணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் முக்கிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

இலங்கையில் பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நேற்று(07) இடம்பெற்ற விசேட அமைச்சரவை…

ஆரம்பமாகின்றது ஐ. நா. பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்று(21) ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதுடன், இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுகுழுவினர் நியுயோர்க்கை சென்றடைந்துள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான…

அமெரிக்கா விரைந்தார் கோட்டாபய!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிப் பயணமானார். ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும்- 21 ஆம் திகதி…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று(14) அமெரிக்காவின் நியூ​யோர்க்கில் ஆரம்பமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொவிட் 19ஐ ஒடுக்குவதன்…

இலங்கையில் பாடசாலைகளை திறப்பது குறித்து அவதானம்!

கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுடபம் ஊடாக நேற்று(10) நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பில்…

ஜனாதிபதி ஆட்சியே இலங்கையில் நடைபெறும்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ​ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறை​களை வகுக்க முடியும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவற்றையெல்லாம் சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குசென்றடையும் என்றார்.…

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவதாக பிரித்தானியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி, அங்கு நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதன் பின் அமெரிக்கா செல்கின்ற ஜனாதிபதி, அங்கு…

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துட…

இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறையினருக்கு அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில்…